"விண்ணைத்தாண்டி வருவாயா" படம் நேற்று பார்த்தேன்.
ரிலீஸான ரெண்டாவது நாளா, வளைகுடா வாழ் தமிழ் மற்றும் மலையாளம் சம்சாரிக்கும் நல்லுலகம் தியேட்டரை நிரப்ப, திரையிலிருந்து நாலாவது வரிசையில் அமர எனக்கு வாய்ப்பு கிட்டியது. படத்திலும் தியேட்டரிலும் ஏகத்துக்கு மலையாள வாடை.
படம் சூப்பர்ப்!
சிம்பு சூப்பர்ப். சிம்புளி சூப்பர்ப்.
டிபிக்கல் கௌதம் படம்.
சிம்பு சூர்யா ரேஞ்சுக்கு அசத்தியிருக்கார் நடிப்பில்.
இசை ஏ ஆர் ரஹ்மான்... ஹோஸன்னா பாடல் இன்னமும் என் இதயத்துடிப்பில்.
த்ரிஷா.. என்னமோ இந்த கேரக்டருக்குப் பொறுத்தமானவராக எனக்குதெரியவில்லை...
சிம்பு ரொமாண்டிக்காக த்ரிஷாவை நெருங்கும்போதெல்லாம், தியேட்டரில் "நயந்தாரா, நயந்தாரா" என கமெண்ட்ஸ்!
மலையாள வசனங்களுக்குத் தமிழில் சப்டைட்டில் தேவையா?
வெருதே சோதிச்சதாணு :)
சிம்புவின் நண்பராகவரும் கேமராக்காரர் ரமேஷ் கலக்கியிருக்கார்.
படம் கொஞ்சம் ஸ்லோதான்.
அதனால என்ன? நான் என்ன படம் முடிஞ்சி ஃப்ளைட்டையா பிடிக்கப்போறேன்... ?
மொத்தத்தில் ஒரு மென்மையான கவிதை,
சிம்புவின் சிம்ப்ளிசிடி, எதார்த்தமான வசனங்கள், காட்சிக்குக் காட்சி கௌதம் டச், ஆலப்புழா லொக்கேஷன்... என பல விஷயங்கள் படத்தின் ப்ளஸ் பாயிண்ட்ஸ்.
கிளைமாக்ஸ் வித்யாசமானதுதான்.
உங்களுக்குப் பிடிக்குமோ பிடிக்காதோ தெரியாது, ஆனால் எனக்கு ஓக்கே.
அட க்ளைமாக்ஸ் எப்படியிருந்தா என்னப்பா, தியேட்டரைவிட்டு வெளியே வரும்போது ஒரு மென்மையான ஃபீலிங் இருக்கே, அதுவே படத்தின் சாதனைதானே.
நம்ப ஊர் ஆட்டோ வாசகம் கேள்விப்பட்டிருப்பீங்க - "சீறும் பாம்பை நம்பு, சிரிக்கும் பெண்ணை நம்பாதே" என்று.
என் நண்பன் சொல்வான், கூடவே தமிழ்ப் பொண்ணானாலும் பார் டான்ஸரா இருந்தா நம்பவே நம்பாதேன்னு!
இந்தப் படம் பார்த்தவுடன் எனக்கு 3 விஷயம் விளங்கியது.
"லவ்" டேஞ்சரான விஷயம்! (டைம், மனி & எனர்ஜி அட் ரிஸ்க்!)
லவ் மேட்டரில் எந்தப் பொண்ணையும் நம்பாதே...!
அம்மா-அப்பா சொல்லும் பெண்ணையே கட்டிக்கோ!
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment